பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா


திருமதி சுசீலாம்மா  பாடினால்  விமர்சிக்க இடமே இல்லை. அவ்வளவு
பாடல்களும்  உயிரை  உருக்கும்  விதமாக  இனிமையாக  பாடி இருப்பார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கில்லை. எந்த  விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், நடிப்பவர் பாடுவது போல  பாடும்  சிறப்பு  அவருக்கு மட்டுமே  சொந்தம்.

திரைப்படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R. கோவர்த்தன்
நடிப்பு: முத்துராமன், A V M ராஜன், பாரதி, ஜோதி லக்ஷ்மி
பாடிய குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தாதா மிராஸி



Upload Music - Share Audio -






எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக