பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

வெள்ளை மலரில் ஒரு வண்டு..vellai malaril oru vandu..

1971 ஆம் ஆண்டு திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் மாதிரி வேடமணிந்து பிரச்சார நாடகங்களில் நடித்தார் முதலமைச்சர் கருணாநிதி யின் மகன் மு.க.முத்து. 1972 ஆம் ஆண்டு அவர் கதாநாயகனாக நடித்த "பிள்ளையோ பிள்ளை' திரைப்படத்தை கலைஞரின் அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்தது. கதை, வசனம் கருணாநிதி. படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணன்பஞ்சு.


இந்தப் படத்தில் மு.க.முத்து, எம்ஜிஆர் போலவே நடை, உடை பாவனையுடன் நடித்தார். பாடினார். சண்டை போட்டார். அதுவும் முதல் படத்திலேயே எம்ஜிஆர் போல இரட்டை வேடம்.
நன்றி: www.maalaisudar.com/

நமக்கு வரலாறு முக்கியம் தான்.. அதைக்காட்டிலும் இனிமையான பாடல்கள் நமக்குத் தேவை. எங்கிருந்து வந்தாலும் ரசிப்போம்...வாருங்கள்.

திரைப்படம்: பிள்ளையோ பிள்ளை (1972)
குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன் (வாலி???)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: மு க முத்து, லக்ஷ்மி
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு









வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு


கத்தும் கடலில் மணி முத்து
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இரு பத்து
படிப்பேன் இளமை மனம் தொட்டு

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

ஹா ஹா ஹா ஹாஹாஆ ஹாஆ ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா

கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
நெஞ்சம் அவனை மறவாது
மஞ்சம் என்றும் உறங்காது
உறங்காது

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக் கோலம்
எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக் கோலம்
அன்பால் வளரும் புது உலகம்
அகமும் புறமும் இனி மலரும்

வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக