பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மயங்காத மனம் யாவும் மயங்கும்

அஷ்டாவதானி P பானுமதி அம்மாள் பாடிய மிக அற்புதமான பாடல். கணீர் என்ற குரலில் விவரமான நடிப்பாற்றலுடன் தெளிவான தமிழ் உச்சரிப்பில் பிரமாதமான பாடல். இணைந்திருக்கும் மக்கள் திலகம் பற்றி சொல்லவே வேண்டாம்.

திரைப் படம்: காஞ்சித் தலைவன் (1963)
இயக்கம்: A காசிலிங்கம்
இசை: கே.வி. மகாதேவன்
நடிப்பு: எம் ஜி யார், பானுமதி
பாடியவர்: பி. பானுமதி
இயற்றியவர்: ஆலங்குடி சோமு









ஆ...ஆ....
மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அழகின் முன்னாலே
ஏ...ஏ..ஏ...ஏ..
ஓ ராஜா
ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

ஆ..
கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கன்னத்திலே பழத் தோட்டம்
கண்களிலே சதிராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
கட்டழகுப் பெண் சிரித்தால்
காளையர்க்குப் போராட்டம்
உணர்ந்து கொண்டாலே
உணர்ந்து கொண்டாலே
உறங்கிடுமோ இளமை
உறவு கொண்டாலோ ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

ஆ..
கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கருமுகில் காண வரும்
கண்டவுடன் நாணமுறும்
கன்னி என்தன் கூந்தலுக்கே
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னி என்தன் கூந்தலுக்கே
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே
புதுமை கண்டாலே
பசித்திடுமோ உமக்கு
பொறுத்திடுவீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
ஆ.. ஆ...

1 கருத்து:

Admin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக