பின்பற்றுபவர்கள்

சனி, 13 டிசம்பர், 2014

இது பால் வடியும் முகம்.. ithu paal vadiyum mugam

 A C திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் கடைசி படம். அதன் பிறகு அவர் திரைப்படத்துறையிலிருந்து ஓய்வெடுத்துக்  கொண்டார்.
பாடல் ஏதோ எல் கே ஜி, யூ கே ஜி குழந்தைகள் பாடல் போல ஆரம்பமாகிறது. இதுவும் இசையே இல்லாத இந்தக் கால பாடலுக்கு  ஆறுதலாகவே இருக்கிறது. இளமையான ரஹ்மான், நதியா நடிப்பில்.


திரைப்படம்: அன்புள்ள அப்பா (1987)
பாடியவர்கள்: K J யேசுதாஸ் & S. P ஷைலஜா
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: A C திருலோகசந்தர்
நடிப்பு: சிவாஜி, நதியா, ரஹ்மான்
பாடல்: வைரமுத்து












இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆடைகள் நூலுக்கு சொந்தம்
ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்

வானுக்கு சூரியன் சொந்தம்
வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்

நீ என் சொந்தம்
நான் உன் சொந்தம்

தந்தம் யானைக்குத்தானே சொந்தம்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்

இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

பொன்னுக்கு நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்

வீணைக்கு நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்

என்னைத் தந்தேன்
]உன்னைத் தந்தாய்

காதல் சொர்க்கங்கள் கண்ணில் தந்தாய்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

லல லா லல லா லலா
லல லா லல லா லலா
லல லாலா லா லல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக