பின்பற்றுபவர்கள்

சனி, 6 செப்டம்பர், 2014

சின்ன சின்ன ஊரணியாம் chinna chinna uuraniyaam

இன்று கலைஞர் T.V. யில் இந்த படம். அன்று முதல் தடவை சிறிய வயதில் பார்த்து மனம் இன்னது என்றறியாமல் ...எம். வி. ராஜம்மா... கல்யாண குமார் நிலை கண்டு அழுத உணர்வு இன்னது என்று இன்றுதான்...படம் முழுதும் பார்த்து உணர்ந்து தெளிந்தேன். அப்படி ஒரு உருக்கமான பாடல் இது. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில்...தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை.. , தாய் என்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை... உள்ளத்தில் இருக்குதையா ...உண்மை சொல்ல மயங்குதையா...! பொல்லாத தடை...! என்ன உண்மை..? ஒரு அக்ராஹரத்துக் கதை அழகுடன் பின்னப் பட்டுள்ளது. ஏழைக் குடியானவன் குழந்தைக்கு தாய் இல்லாது போனதால்..தன குழந்தையோடு சேர்த்து தன் பால் கொடுக்க, விலகியிருந்த வீம்பான ஆச்சாரமான கணவன் வந்து அக்குழந்தை தனது என நினைத்து எடுத்துச் செல்கிறான். தாய்ப்பால் அவசியம் எனதெரிந்து அவளை வேண்டா வெறுப்பை அழைத்து வந்து உண்மையான குழந்தையை மாட்டுக் கொட்டடியில் ..மாட்டுக்காரனை வளர்கிறான். இவருக்கு உண்மை உரைத்தால் ஏழையின் குழந்தைக்குப் பால் கொடுத்தால் அபசாரம் என்று தள்ளி வைத்து விடுவார் என்று பயந்து..... கண்ணெதிரிலேயே சொந்த மகன் மாட்டுக்காரனாய் அடிபட்டு வளர்வதும்...ஏழைக் குழந்தையைப் பாசம் சிறிதும் குறையாமல் உன்னதமானவனாய் அந்தத் தாய் எம். வி. ராஜம்மா... வளர்த்து வருவதும்...என் கண்ணில் அன்றுபோல் இன்றும் கண்ணீர் பெருகியது நடிப்பு அற்புதம்... அன்னையர் தினத்திற்கு ...இப்பாடலே முதன்மை யாய்ப் பொருந்தும்..... சின்ன சின்ன ஊரணியாம்....

நன்றி: Kothai notes on Music and Movie

ஆழ்மனதை தாக்கும் கே வி மகாதேவனின் மற்றுமொரு பாடல்.

திரைப் படம்: தாயில்லா பிள்ளை (1961)
இயக்கம்: L V பிரசாத்
நடிப்பு: கல்யாண்குமார், முத்துக் கிருஷ்ணன், T S பாலையா, நாகேஷ்,  M V ராஜம்மா
இசை: K V  மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்













சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்

மாமரத்து கைளைதனிலே
மாடப் புறா கூண்டுகளாம்
கூண்டுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்
மாமரத்து கைளைதனிலே
மாடப் புறா கூண்டுகளாம்
கூண்டுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்

சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்

சிறகு முளைக்கும் முன்னே
திசையறிந்து நடக்கும் முன்னே
சிறகு முளைக்கும் முன்னே
திசையறிந்து நடக்கும் முன்னே
பறவையின் குஞ்சு ஒன்று
பறந்ததய்யா கூடு விட்டு
பறவையின் குஞ்சு ஒன்று
பறந்ததய்யா கூடு விட்டு
கூடு விட்டு போன பிள்ளை
குடியிருக்கும் இடம் தேடி
கூடு விட்டு போன பிள்ளை
குடியிருக்கும் இடம் தேடி
ஓடி வந்த தாய் பறவை
ஊமையாகி நின்றதய்யா
ஓடி வந்த தாய் பறவை
ஊமையாகி நின்றதய்யா

தன் பிள்ளை என்று சொல்ல
தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்துக் கொள்ள
சேயாலும் கூடவில்லை
தன் பிள்ளை என்று சொல்ல
தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்துக் கொள்ள
சேயாலும் கூடவில்லை

உள்ளத்தில் இருக்குதைய்யா
உண்மை சொல்ல மயங்குதய்யா
பொல்லாத தடையை எண்ணி
புலம்புதய்யா கலங்குதய்யா
பொல்லாத தடையை எண்ணி
புலம்புதய்யா கலங்குதய்யா

சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்



1 கருத்து:

சக்திவேல் சொன்னது…

பாடல்கள் கண்ணதாசன் அல்ல... கவிஞர் பி.கே.முத்துசாமி அவர்கள்

கருத்துரையிடுக