பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 மே, 2014

எங்கே என் ஜீவனே

அருமையான ஜனரஞ்ஜகமான காதல் பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. காட்சி மட்டும் சிறிது Adults only.
ஏனோ ஒரு வாரமாக தமிழ்வெளியில் எனது பதிவு இணைய மறுக்கிறது.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P  முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்:வைரமுத்து?
பாடியவர்கள்: யேஸுதாஸ், ஜானகி




http://asoktamil.opendrive.com/files/Nl8zNzc0NzAyMF9wRkpLN182NGI3/Enge%20En%20Jeevane.mp3









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ \

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்

கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்

மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை

பூக்கள் பூக்கும் ஒசைகள்
காதில் கேட்பதில்லை

காமபானம் பாய்வதால்
காயம் ஆகுமே
 காமபானம் பாய்வதால்
காயம் ஆகுமே

கலசம் இங்கு கவசம் ஆகும்
காமன் அம்பு முறிந்து போகும்

மலர்ந்த தேகம்
சிவந்து போகும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

1 கருத்து:

SANKAR சொன்னது…

கலசம் இங்கு கவசம் ஆகும்
காமன் அம்பு முறிந்து போகும்
படத்தில் இந்த வரிகளும் மாறி ஒலிக்கிறதே? சென்சார் கட் ?

கருத்துரையிடுக