பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 மார்ச், 2014

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க

அபூர்வமான பாடல். இனிமையாக பாடப்பட்டுள்ளது. புதிய இசையமைப்பாளரா? நன்றாக உள்ளது.

திரைப் படம்: புதிய தென்றல் (1993)
பாடியவர்கள் : எஸ்.பி.பி, கே.எஸ்.சித்ரா
நடிப்பு: ரமேஷ் அரவிந்த், சிவரஞ்சனி
இசை: ரவி தேவேந்தரன்
இயக்கம்: பிரபாகர்




http://asoktamil.opendrive.com/files/Nl8zNDgyNTc5N19OTXFwZl8wZDBm/Thendralile%20Mithanthu.mp3













தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க
நீ மண்ணில் வந்த அந்த நேரங்கள் வாழ்க
நீ என்னை கண்ட அந்த காலங்கள் வாழ்க
உந்தன் பூம்பாதம் போகின்ற பொன் வீதி வாழ்க

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க

நட்சத்திர மண்டலத்தில் நமக்கு ஒரு மண்டபமா
உன் பெயரை எழுதி வைக்கிறேன்
உன் அழகை தொழுது வைக்கிறேன்

நட்சத்திர மண்டலமா நமக்கு அது தேவையில்லை
மண்ணுலகில் எழுதி வைக்கிறேன்
மடியில் விருந்து வைக்கிறேன்

இலையிட்ட விருந்திலே அறு சுவைதான்

இள்மையின் விருந்திலே நூறு சுவைதான்

இது காமன் பாதி காதல் பாதி
கவிஞன் நமக்கு சொன்னது தான்

தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கன்னன் வாழ்க

பறவைகள் பறந்து செல்ல பன்னம் ஏதும் வானில் இல்லை
நீயும் அந்த பறவை ஜாதியே
நிம்மதிக்கு தடைகள் இல்லையே

சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்
சொல்லை விட்டு பிரிவதில்லை
சோகம் இனி வருவதில்லையே
சூரியனில் இரவு இல்லையே

கன்னியருக்கு பெயரிலே கவியரங்கம்

காதல் பற்றி பாடினால் தமிழ் வணங்கும்

அந்த காமன் சோலை எங்கும்
நாளை காதல் ரதங்கள் சுற்றி வரும்

தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கன்னன் வாழ்க
பூவோடு வந்த இந்த பொன் மாறன் வாழ்க
நீ வாழும் மண்ணில் அதை நான் கொண்டு வாழ்க
நம் பொன் வீதி போகின்ற பூத்தென்றல் வாழ்க

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக