பின்பற்றுபவர்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

கண்ணான கண்ணனுக்கு அவசரமா

மீண்டும் கணீர் குரலோன் சீர்காழி S கோவிந்தராஜனுடன் இணைந்து P சுசீலா பாடி இருக்கும் பாடல். இதிலும் சுசீலா அம்மாவின் குரல் தனித் தன்மையுடன் ஒலிக்கிறது.

திரைப் படம்: ஆலய மணி (1962)
இயக்கம்: K ஷங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி, S S ராஜேந்திரன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTAwOTc3Nl9kU1JGUF8xYmQ3/kannana%20kannanukku%20avasarama.mp3





வானம்பாடி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

கன்னந்தனில் முத்தமிட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணம் கண்டு நான் பாடவா
இந்தமலர் வண்ணம் கண்டு நான் பாடவா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக