பின்பற்றுபவர்கள்

சனி, 11 மே, 2013

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

இனிமையானப் பாடல். அருமையான கவிதை, அழகான இசை, ரொம்ப சிரமப்பட்டு   பாடியிருப்பார்கள் பாடகர்கள். ஒரு குறையும் சொல்ல முடியாத பாடலில்.........
2.46 நிமிடங்களிலொரு நிழல் உருவம் கடப்பதும் படமாகி இருப்பது தெரிந்தே விட்டு விட்டார்களா? அல்லது கவனிக்கவே இல்லையா?

திரைப் படம்: பறக்கும் பாவை (1966)
இசை:  M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா ,
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T R ராமண்ணா

http://asoktamil.opendrive.com/files/Nl81OTUyMTUyX0NvRExLXzU2ZGE/Kalyaana%20Naal%20Paarka%20Sollalama.mp3





கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கி பள்ளி கொள்ளுவோமா

சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா

நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடி சென்று குடியிருப்போமா
தமிழுக்கு செய்தி சொல்லி அழைத்து கொள்வோமா

அந்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதை கவனிக்கவே இல்லையே...!

இனிமையான பாடலுக்கு நன்றி...

கருத்துரையிடுக