பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜனவரி, 2013

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா

நல்லதொரு இளமையான பாடல். பாடிய குரல்களிலும், இசையிலும் இளமைத் துள்ளுகிறது.
இந்தப் படத்தின் கதை ஆனந்த விகடனில் தொடர்க்கதையாக வந்து சக்கை போடு போட்டது. திரு மணியன் அவர்கள் எழுதியது.

திரைப் படம்: மோகம் 30 வருஷம் (1976)
இசை: விஜயபாஸ்கர்
பாடிய குரல்கள்:  , வாணி ஜெயராம்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா, சுமித்திரா


http://asoktamil.opendrive.com/files/Nl81MDYwODMxX3RjVmFDX2RkMzQ/sangeetham%20%20raagangal.mp3





சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
மோகம்
இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா

உலகில் ஒரு பாகம்
உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

என்னழகை நானே தான் சொல்வதா
ஏக்கம் என்னவென்று நான் சொல்வதா
ஓவியத்து பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லா பெண்மை துயில் கொள்ளுமா
கூட்டுறவு இன்பம்
கேட்டுப் பெறும் துண்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
ஹு ஹு ம்
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
ம் ம்

மோகம்
நோ நோ

இன்பம்
அடடா

புண்ணியமா புருஷார்த்தமா

ஆண் மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது

பெண் மனது இங்கே தனல் கொண்டது
தேன் சிரித்த நானம் தடைக் கொண்டது

நீந்தி வரும் வெள்ளம்
சாந்தி பெறும் உள்ளம்

புண்ணியமா புருஷார்த்தமா
ம் ம்

சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்
மோகம்
இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ம் ம்
ஹா 

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

இப்படத்தின் இயக்குனர் SP முத்துராமன்.

மகேந்திரனின் வசனம் இப்படத்தில் நான்றாக இருக்கும்.

மகேந்திரனின் இயக்கத்தில் வந்த முதல் படம் முள்ளும் மலரும்.

கருத்துரையிடுக