பின்பற்றுபவர்கள்

புதன், 5 டிசம்பர், 2012

நீலமாம் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

அழகான இருகுரலில் அருமையானப் பாடல்.
இனிமை, இளமை, வழக்கமான மென்மை என எல்லாம் இணைந்த பாடல்.

திரைப் படம்: மலை நாட்டு மங்கை (1973)

இயக்கம்: P சுப்ரமணியன்
நடிப்பு: ஜெமினி, விஜயஸ்ரீ
இசை: விதபால் வர்மா
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P சுசீலா

http://www.divshare.com/download/15371596-f27




நீலமாம் கடல் அலையில்
கோலமிடும் மீனினங்கள்
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

ஆழமாம் உன் மனதில்
ஆசை வைத்த என் கனவு
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

பச்சை மலை பூ மரத்தில்
பாரிஜாத பூ பறித்தேன்

பச்சை மலை பூ மரத்தில்
பாரிஜாத பூ பறித்தேன்

பெண்ணழகு கூந்தல் தனில்
பின்னிவிட சம்மதமோ

நானமாம் திரையெடுத்து
பூவையென்னும் வெண்ணிலவு
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்

முத்து முத்து நீர்த்துளிப் போல்
மூடி வைத்த தேன் துளிகள்

எந்த நாள் பார்ப்பதென்று
ஏங்கியதோ உன் விழிகள்

காதலோ கரைக் கடக்க
கண்ணம் ரெண்டும் பளபளக்க
துள்ளுவதென்ன
சொல்லுவதென்ன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

1 கருத்து:

ஹேமா சொன்னது…

எத்தனையோ நாட்கள் ஒரு வரியின் ஞாபகத்தோடு தேடிய பாடல்.நன்றி !

கருத்துரையிடுக