பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

வீரியமிக்க, நாம் கற்பனை செய்ய முடியாத பாடல் வரிகள், கம்பீரமான குரல், அதற்கேற்ற தேவையான அளவு, எந்த விதத்திலும் எரிச்சலை ஏற்படுத்தாத இசை. ஒரு திரை இசை பாடலுக்கு இலக்கணம் வகுத்தப் பாடல். புத்துணர்ச்சியூட்டுகிறது.

திரைப்படம்: படகோட்டி (1964)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்

http://www.mediafire.com/?czp4zppi85he495



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல பதிவுகளில் பகிர்ந்து கொண்ட பாடல்...

நன்றி...

கருத்துரையிடுக