பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இது வெளிவராத படங்களில் ஒன்று.
இனிமையான இசையில் இதே வரிகளைக் கொண்ட பாடலை SPB, ஆஷா போன்ஸ்லே பாடியது, முன்னமே நமது இழையில் கொடுத்திருக்கிறேன். அதை கேட்க இதை சுட்டுங்கள்.





பாடல் வரிகளின் தரத்தை பார்த்தால் இது கங்கை அமரன் பாடல் போல தெரிகிறது. மன்னிக்கவும் நான் தவறாகவும் இருக்கலாம்.

திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1Njc3OF9yR2djbF83NTJi/unnai%20naan%20parkaiyil%20KJY.mp3





உன்னை நான் பார்க்கையில்

ஊமையாய் போகிறேன்

வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

பொன்மானைப் பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ

விண்மீனைக் கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ

என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்

உன் பார்வையில் பொன்மணி பாடும் ராகங்கள்

நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்

நீ அல்லவோ எந்தன் காதல் வரம்

நீ மங்கையா ஆசையின் கங்கையா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்


எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்

என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் ராகம்

ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்

ஓர் பார்வையில் வந்ததே அந்த எண்ணங்கள்

உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்

உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்

என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க நன்றி சார்... இணைப்பில் பார்க்கிறேன்...

கருத்துரையிடுக