பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே


ஒரு உரை நடையை இனிய பாடலாக்கி இருக்கிறார் பாடும் நிலா பாலு. M S விஸ்வனாதனின் இசை பாணியை மரகதமணியிடம் கொண்டு வந்திருக்கிறார் பாலசந்தர். அழகுப் பாடல்

திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: மம்முட்டி, பானுப்ரியா
இயக்கம்: K பாலசந்தர்
இசை: மரகதமணி
















மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளி சேர்த்தாளே
அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரரிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரரிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாட்டு... நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

பல்லவியே அமர்க்களமாக அமைந்த பாடல் பாலுஜி தனக்கே உரிய பாணியில் அதிக ஈடுபாடுடன் பாடியிருப்பார். பகிரிவிற்க்கு நன்றி சார்.

கருத்துரையிடுக