பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2012

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

10 நாட்கள் திடீர் சென்னை பயணம். கல்யாண வேலைகள், அலைச்சல் காரணமாக இந்த நீண்ட இடைவெளி. அடுத்தவாரம் தொடர்ந்து சந்திப்போம். புதிதாக இணைந்த அன்பர்களுக்கும் தொடர்ந்து பாடல்களை ரசித்து கருத்துகளை வழங்கி வரும் அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இன்றும் ஒரு இனிமையான பாடல்.  முழு படமும் இன்று கிடைத்து முழு பாடலையும்  இங்கே  பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

திரைப் படம்: புத்திசாலிகள் (1968)
நடிப்பு:  ஜெயஷங்கர், M A ராதிகா, மனோரமா
இயக்கம்: அருண்
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, Y ஸ்வர்னா
பாடல்: வாலி


Listen Music Files - Embed Audio Files -








முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

முத்தம் முத்தம்

இதயத்திலே ஒரு கதவிருக்கும்

இரவு பகல் அது திறந்திருக்கும்

விழிகளிலே வரும் வழி இருக்கும்

வாவெனவே மனம் அழைத்திருக்கும்

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

ஓ  ஓ  ஓ  ஓ  ஓ  ஓ

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

பிடி இடையோ இல்லை மலர் கொடியோ

குறு நகையோ அது சிறு கதையோ

குறு நகையோ அது சிறு கதையோ

காலமெல்லாம் வரும் தொடர் கதையோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

கலைகளிலே நல்ல அனுபவமோ

ரஸிப்பதிலே இது புது விதமோ

ரகஸியமாய்த் தொட சுகம் வருமோ

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகம் என்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

லலா லாலா  லாலா








3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறு வயதில் கேட்ட பாடல்... மறந்தே போய் விட்டது...

மிக்க நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

//கல்யாண அலைச்சல்கள் // கல்யாணம் யாருக்காக இருந்தாலும் என் அன்பான அட்வான்ஸ்வாழ்த்துக்கள். இந்த பாடலும் ஓர் அறிதான பாடல்.

Unknown சொன்னது…

நன்றி திரு கோவை ரவி சார், நான் முன்பே இங்கு தெரிவித்திருந்தேன். எனது மகனுக்கு அக்டோபரில் திருமணம். நமது கிணற்றுத் தவளை நண்பர்கள் எல்லோருக்கும் விரைவில் அழைப்பு வரும். தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக