பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 3 ஜூன், 2012

வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது


T M S அவர்களின் இனிமையான குரல் S S R அவர்களுக்கு பொருந்தும்படி பாடி இருக்கிறார். அதற்கு இணையாக P சுசீலா அம்மாவின் குரல். ஓர் அழகானப் பாடல்.

திரைப் படம்: காட்டு ரோஜா
பாடல்: கண்ணதாசன்
இசை: மகாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், பத்மினி



http://snd.sc/K67Vkn

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது
வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன்
கண்ணென்று சொன்னது

கண்ணொன்று வந்தது
காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
கண்ணொன்று வந்தது
காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது

பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டுக்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது
பாட்டொன்று வந்தது
பருவத்தைக் கேட்டது
காட்டுக்குள் நான் போனேன்
கனியங்கே நின்றது

கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
கனியங்கே நின்றது
கைகளில் சாய்ந்தது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது
இனி எந்தன் காலங்கள்
இங்கேதான் என்றது

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது

யாரென்று கண்டது
யார் சொல்லி வந்தது
நீர் கொண்ட மேகம் போல்
நெஞ்சத்தில் நின்றது

நெஞ்சத்தில் நின்றது
கொஞ்சத்தில் மாறுமோ
வஞ்சிக்கு வாழ்வெல்லாம்
தஞ்சம் உன் பாதமே

வண்டொன்று வந்தது
வாவென்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன்
பேசாமல் நின்றது
ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக