பின்பற்றுபவர்கள்

திங்கள், 4 ஜூன், 2012

நிலவோடு வான் முகில் விளையாடுதே

திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளம் சொல்லவே வேண்டாம். தமிழ் உச்சரிப்பும் எப்போதும் தெள்ளத்தெளிவாக இருக்கும். அவரது பாடலுக்கு முன்னுரையே தேவை இல்லை.


திரைப் படம்: ராஜராஜன் (1957)
நடிப்பு:  M G R, பத்மினி
இயக்கம்: T V சுந்தரம்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி S கோவிந்தராஜன், A P கோமளா
பாடல்: கு சா கிருஷ்ண மூர்த்தி
 


http://www.divshare.com/download/18185367-175


நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே


எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே

எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே

இனிதாகவே இன்ப கதை பேசுதே

இனிதாகவே இன்ப கதை பேசுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே


புது பாதைத் தனை காண மனம் நாடுதே

உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

புது பாதைத் தனை காண மனம் நாடுதே

உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே


மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்

மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்

மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா


இதயம் ஒன்றாகி உறவாடுவோம்

என்னாளும் பிரியாத நிலை காணுவோம்

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்


என்னாலும் பிரியாத நிலை காணுவோம்

ஓ ஓ ஓ ஓ

நிலவோடு வான் முகில் விளையாடுதே

அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக