பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 ஏப்ரல், 2012

உலக மகா திரைப் படம் 3


நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!

3 என்கின்ற தமிழ் படம் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்போது இந்தக் திருக்குரள் தான் நினைவுக்கு வந்தது.  எந்தவித குறிக்கோளும் இல்லாத தமிழ் கலாச்சாரத்தை தூக்கி காலடியில் போட்டு மிதிக்கும் ஒரு அருமையான திரைப் படம். தமிழ் ஆர்வாளர்களோ மற்றும் ஏனைய எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிக்கும் நல்லவர்களோ ஏன் இது பற்றி வாயே திறக்கவில்லை என்று புரியவில்லை. பணக்காரர்கள் வம்பு நமக்கு வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டார்களோ? பணம் நம்மிடம் இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் எடுக்கலாம் என்றால் அவர்கள் வேறு என்ன செய்தாலும் நாம் சொல்வதற்க்கு ஏதுமில்லை. Pub இல்  தாலி கட்டி கல்யாணம், கணவனும் மனைவியும் சேர்ந்து தண்ணி அடிப்பது, மனைவி கணவனை அறைவது, அடுத்தவனுக்கு எதிரே கணவனை நக்கு நக்கு என்று நக்குவது என்று இப்படி புல்லரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்த இனிய தமிழ் படமாக அமைந்துள்ளது.
இறுதியில் எனக்கு தோன்றியது துக்கிரிக்கு பிறந்த துக்கிரிகள் எடுத்த படம் இப்படித்தான் இருக்கும் என்று. வாழ்க நிறைய சூடு சொரணை உள்ள தமிழன்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக