பின்பற்றுபவர்கள்

சனி, 10 டிசம்பர், 2011

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா

பண்பான காதலை அதே பண்புடன் வெளிப் படுத்தும் பாடல் வரிகள். இனிமையானப் பாடல்.

திரைப் படம்: மக்களை பெற்ற மகராசி 1957
இசை: K V மஹாதேவன்
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ், சரோஜினி
இயக்கம்: A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி, நம்பியார், M N ராஜம்




http://www.divshare.com/download/16344413-5ff



http://www.divshare.com/download/16344426-117

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பகையாலே காதலே அழியாது கண்ணா
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா

இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

2 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

வணக்கம்! அமைதியான நம்பியார். இனிமையான எம்.என்.ராஜம். அருமையான பாடலை கண்டும், கேட்டும் ரசிக்கத் தந்த உங்களுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்வுக்கு நன்றி Sir!

கருத்துரையிடுக