பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 டிசம்பர், 2011

சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்கார பாடல் உண்டு


அழகான இசையில் ஒரு பாடல். ஹிந்தியின் அப்பட்டமான நகல் என்றாலும் இனிமை மாறாமல் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஆனால் கதா நாயகிதான் நீண்ட நாளாக நடித்துக் கொண்டிருக்கும் முதியவர். ரவிச்சந்திரன் கொஞ்சமாக சிவாஜி போல முயற்சி செய்திருக்கிறாறோ எனத் தோன்றுகிறது.

திரைப் படம்: ஜஸ்டிஸ் விஸ்வனாதன் (1971)
குரல்கள்: T M S, சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை: : S வேதா
நடிப்பு: ரவிசந்திரன், சகுந்தலா
இயக்கம்: G R நாதன்




http://www.divshare.com/download/16316443-68e



http://www.divshare.com/download/16316460-4b7

சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை

சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை

அரண்மனை ஒன்று உண்டு
ராணி இல்லை இங்கு
அலங்கார தோட்டம் உண்டு
கிளி இல்லை இங்கு
மனம் என்னும் கோவில் உண்டு
தெய்வம் இல்லை இங்கு
மகராணி என்னை விட்டு
நீ போவதெங்கு

சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை

சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை

அரண்மனை தேடி வந்து
பணி செய்யும் பெண்ணை
அந்தபுர ராணி என்று
சொல்வதென்ன என்னை
மன்னன் அன்றி யாறறிவார்
கன்னி இளம் கண்ணை
மனம் என்னும் கோயிலுக்குள்
சிலை வைத்தேன் உன்னை

சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை
சிங்கார தமிழும் உண்டு
பாடல் ஒன்று தேவை

சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை

பிடிபட்ட மானை இன்று
சிறை வைத்து பார்ப்பேன்
பிள்ளை என ஆடவிட்டு
அள்ளி முகம் சேர்ப்பேன்
முடிவில்லை என்ற வண்ணம்
மோக கதை சொல்வேன்
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் காண்பேன்

சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் இங்கு உண்டு
சிங்கார பாடல் உண்டு
தமிழ் இங்கு உண்டு
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் இங்கு உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக