பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்


அழகான நீரொடைப் போல ஒரு பாடல். இசையும் கவிதையும், குரல்களும் தங்கு தடங்கல் இன்றி அழகான ஒரு ஓட்டம்.

திரைப் படம்: இது சத்தியம் (1963)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S,  P சுசீலா
நடிப்பு: அசோகன், சந்த்ரகாந்த்
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/16268763-44e






மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
ஆஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்

முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்

பாதிக் கண்ணை மூடித்திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
உன் பாதிக் கண்ணை மூடித்திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து

ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும்
ஆஹா கல்லும் கனியாகும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
தென்னம்பாளை போல சிரித்தாள்
சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ

அவள் இவள்தானா இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா

வானம்பாடிப் போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
வானம்பாடிப் போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள்
கன்னி தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

அவள் இவள்தானா இவள் அவள்தானா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். உங்கள் பதிவு அருமை. இன்னும் நிறைய எழுதுங்கள். தங்களின் பல பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

கருத்துரையிடுக