பின்பற்றுபவர்கள்

புதன், 9 நவம்பர், 2011

குங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

அழகான பாடல். இனிமையான இசையும் குரல்களும் பாடல் வரிகளும் ஒன்றாய் இணைந்த பாடல் எனது சிறு வயதிலேயே பள்ளி பருவத்திலேயே ரசித்த பாடல். ரோஷனரா பேகம் என்ற பெண்மணியின் பாடல் வரிகள். அதற்கு பின் அவர் பாடல் எதுவும் எழுதவில்லை என்று தெரிகிறது.


திரைப் படம்: குடியிருந்தக் கோவில்
இசை: M S விஸ்வனாதன்
பாடும் குரல்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: K ஷங்கர்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா




http://www.divshare.com/download/16130511-223




http://www.divshare.com/download/16130897-1d5

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தித்திக்கும் இதழ் மீது மோகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தேகம் தேகம்

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண்ணான பின் என்னை தேடி

கொண்டதே எண்ணங்கள் கோடி

கொண்டதே எண்ணங்கள் கோடி

கோடி கோடி

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கம் எங்கும் ஆனந்த கங்கை

ஜில்லென்னும் குளிர் காற்று வீசும்

மௌனமே தான் அங்கு பேசும்

மௌனமே தான் அங்கு பேசும்

பேசும் பேசும்

மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

கற்பனை கடலானபோது

சென்றதே பூந்தென்றல் தூது

சென்றதே பூந்தென்றல் தூது

தூது தூது

குங்குமப் பொட்டின் மங்களம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

நெஞ்சமிரண்டின் சங்கமம்

இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக