பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2011

கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்


அருமையான பாடல். திருமதி சுசீலாவின் இனிய குரலில் ஒரு பெண்ணின் கல்யாணக் கனவுகள்.

திரைப் படம்: காவிய தலைவி (1971)
குரல்: P சுசீலா
இசை: V குமார்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சவுகார் ஜானகி, ஜெமினி, ரவிசந்திரன்
இயக்கம்: பஞ்சு அருணாசலம்



http://www.divshare.com/download/16100064-a7c

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ  ஹோ ம் ம் ம் ஹா ஹா ஹா
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

அல்லிராணி சில வெள்ளி தீபங்களை
கையிலேந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்
தெய்வீக பண்பு நான் கொண்டாடும் அன்பு
என் உள்ளம் பொன்னென்று
என்னாளும் நம்பு
ஆஹா.. ஓஹோ.. லாலா..ஆஹா..
மஞ்சளோடு மண மாலை சூடி வரும்
நல்ல காலம் வருக
மன்னனோடு ஒரு ராணி போல வரும்
இன்ப நாளும் வருக

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் தான் காக்கும் கல்யாணமே
நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும்
நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும்
வேண்டும் வேண்டும்.. ஹூஹூம்.. ஹூஹூம்
பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும்
நல்ல காலம் வருக
உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்து விட
தெய்வம் காவல் தருக

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

காவியத்தலைவி படத்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

இனிமையான பாடல்.மிக்கநன்றி .

தாஸ்

TI Buhari சொன்னது…

இயக்குநர்:பாலச்சந்தர்

கருத்துரையிடுக