பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி


சிறிது வேகமான பாடல். இசையும், பாடல் வரிகளும், பாடிய குரலும் பாடல் என்றால் இதுதான் பாடல் என்பதை நொடிக்கு நொடி பறைச் சாற்றுகின்றது.
இதே பாடல் சோக வடிவிலும் உள்ளது. ஏனோ அதை இந்த நேரத்தில் இழையேற்ற எனக்கு மனம் கேட்கவில்லை. இது இன்ப தீபாவளிப் பாடல்.
 
திரைப் படம்: கல்யாணப் பரிசு (1959)
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்:  C V ஸ்ரீதர்
இசை: A M ராஜா
குரல்: P சுசீலா



http://www.divshare.com/download/15858152-689

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா... ஆ  ஆ ஆ
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா... ஆ  ஆ  ஆ
வேறென்ன வேணுமடா...

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா... ஆ  ஆ ஆ
உறவாடும் நேரமடா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக