பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011

கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னனி இசையில் மிக அழகாக பாடியிருக்கிறார்கள்.
வாணி ஜெயராம் குரல் இந்தப் பாடலில் மிக வித்தியாசமாக அமைந்துள்ளது.
திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: விஜய காந்த், வனிதா, காயத்திரி
இசை: சங்கர் கணேஷ்

கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ

ஆ...ஹா...ஆ ஆ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
புதுவகை மலர் இவள் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

மலர் இதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன
மையல் தரும் தையல் மாணிக்க கழுத்தோடு சூட்ட
மலையருவி தமிழ் கவியெழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசைப்பாட்டும் கல்யாண திருநாளை காட்ட
மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல்
தள்ளாடும் காலம் எது...
ஆ ஆ ஆ

கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
புதுவகை மலர் இவள் புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ

நகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தாலென்ன
மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டு
இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே
நீயும் மடல் போடு நாம் கூடும் இடம் தன்னை கேட்டு
தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது
என் கையில் என்னாவது...
ஆ ஆ ஆ

தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ
மலர்களும் வடிவிலே மாநாடு கூட்டுமோ

4 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் உதயம் சொன்னது…

இசை : இளையராஜா அல்லவா.அருமையான பாடல். வாலி எழுதியது. இதே மாதிரி இன்னும் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறார். "வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ" மற்றும் "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ".

பால கணேஷ் சொன்னது…

ஆட்டோ ராஜா படத்தில் இளையராஜா பாடிய சந்தத்தில் பாடாத கவிதை மிக இனிய பாடல். (அவர்தான் இசை என்றும் நினைவு) இப்பாடலும் அருமை.

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

music illayaraja.

கருத்துரையிடுக