பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கண்ணில் என்ன கார் காலம் கன்னங்களில் நீர்

நல்ல இனிமையான ரஜினியின் படத்திலிருந்து ஒரு இனிமையான சோகப் பாடல். காணொளியுடன்.


திரைப் படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
இயக்கம்: பாலு மகேந்திரா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S P B, ஜானகி
பாடல்: வைரமுத்து
தயாரிப்பு: A V M சரவணன்














கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா ஞாயமா பெண்ணே.. ஹோ..

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் என்று வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம் என்று வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா ஞாயமா பெண்ணே.. ஹோ..

கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அருமையான பாடல். தயாரிப்பு : A.V.M.சரவணன் அல்ல. கலாகேந்திரா என்கிற நிறுவனத்தின் தயாரிப்பு.

நாய் நக்ஸ் சொன்னது…

Nalla padal....
En bloglum oru padal ullathu...

கருத்துரையிடுக