பின்பற்றுபவர்கள்

சனி, 7 மே, 2011

தங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஷங்கர் கணேஷ் இசையில் மீண்டும் ஒரு மென்மையான பாடல்.


திரைப் படம்: ரகுபதி ராகவ ராஜாராம்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
நடிப்பு: ரஜினி, விஜய குமார், சுமித்திரா



http://www.divshare.com/download/14776484-ac4


தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

பால்வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்

தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
இந்த ராஜாவும் தவமிருந்தான்

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

என்றும் இளமை போல்தான் இந்தப் பாடலும் . பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Raashid Ahamed சொன்னது…

கேட்பதற்கு உற்சாகப்படுத்தும் ஒரு பாடல். சிறுவயதில் கேட்டது.ரசித்தது. நினைவூட்டியமைக்கு நன்றி.

கருத்துரையிடுக