பின்பற்றுபவர்கள்

சனி, 19 மார்ச், 2011

நீரில் ஒரு தாமரை..neeril oru thamarai...

தமிழ் உதயன் விருப்பப் பாடல் இது. நல்லதொரு பாடலைத் தான் கேட்டிருக்கிறார். நானும் இந்த பாடலை இப்போதுதான் முதல் முறை கேட்கிறேன்.
நீங்கள் கேட்ட மற்றொரு பாடலான இரவு பூக்களே..இரவு பூக்களே.. ஆரம்ப வரிகள் சரிதானா? அல்லது அந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

திரைப் படம் நெஞ்சத்தை அள்ளித் தா (1984)
நடிப்பு: மோகன், லக்ஷ்மி, சாதனா சர்கம்
குரல்: ஜெயசந்திரன்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமீர் ஜான்



http://www.divshare.com/download/14337006-66c







நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ
நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ

வீட்டிலொரு ஓவியம்
ஓவியத்தில் பெண் முகம்
வீட்டிலொரு ஓவியம்
ஓவியத்தில் பெண் முகம்
பெண் முகத்தில் சிந்தனை
சிந்தனைகள் யார் வசம்
பெண் முகத்தில் சிந்தனை
சிந்தனைகள் யார் வசம்
சித்திரத்தை பார்த்ததும்
முத்தமிட ஓடினேன்
முத்தமிட போகையில்
சித்திரத்தை தேடினேன்
நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ

நேற்று சொன்ன வார்த்தைகள்
நீல விழிப் பார்வைகள்
நேற்று சொன்ன வார்த்தைகள்
நீல விழிப் பார்வைகள்
ஊட்டி வைத்த ஆசைகள்
உன் சிரிப்பின் பாஷைகள்
ஊட்டி வைத்த ஆசைகள்
உன் சிரிப்பின் பாஷைகள்
காதலித்த ஞாபகம்
கடைசி வரை போகுமோ
கூட வந்த நாட்களை
மறப்பதென்ன நியாயமோ

பாட்டு ஒன்று பாடினேன்
பாடியது கேட்டதோ
பாட்டு ஒன்று பாடினேன்
பாடியது கேட்டதோ
கேட்ட குரல் வாடுமோ
வாட்டுவதும் நியாயமோ
கேட்ட குரல் வாடுமோ
வாட்டுவதும் நியாயமோ
பாதை பல மாறலாம்
மாறியது சேரலாம்
சேர்ந்து வர எண்ணினேன்
எண்ணியது பாவமோ

நீரில் ஒரு தாமரை
தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை
புன்னகையில் என்னவோ



3 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

கேட்டதேயில்லை.. இனிமையான மெட்டு. அருமையான குரல். நன்றி.

அமைதி அப்பா சொன்னது…

நானும் இப்பொழுதான் கேட்கிறேன். நன்றி.

தமிழ் உதயம் சொன்னது…

மிக்க நன்றி. பாடலை தந்தமைக்கு. நான் எதிர்பார்க்கவே இல்லை - இந்த பாடல் கிடைக்கும் என்று.

சார், நான் "தமிழ் உதயன்" அல்ல. தவறுதலாக "தமிழ்உதயன்" என்றே குறுப்பிடுகிறிர்கள். "தமிழ் உதயம்" என்பதே சரி.

கருத்துரையிடுக