பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம்

மீண்டும் கொஞ்சம் பழைய அமுதான பாடலுக்கு போகலாம். இது தேன் மழைக்காக பல சிறந்த பாடல்களில் ஒன்று. இனிமையான இசையமைப்பு.


திரைப்படம்: தேன் மழை (1966)
இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி,  K R விஜயா
இசை: T K ராமமூர்த்தி



http://www.divshare.com/download/14025597-349



விழியால் காதல் கடிதம்
ம் ம் வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
ஹோ ஹோ

ம்ம்

சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

விழியால் காதல் கடிதம்

வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

பனிப் போல் பார்வை மின்ன
கனிப் போல் வார்த்தை சொன்ன
சிலை மேல் காதல் கொண்டேன்
சிரிப்பில் கவிதைக் கண்டேன்

இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
எதுதான் உறவின் எல்லை
என்றால் வார்த்தை இல்லை

கண் மேல்
நடந்தேன்

கை மேல்
கிடந்தேன்

மலர் போல்
மலர்ந்தேன்

மடி மேல்
விழுந்தேன்

குளிர் நீராடலாம்

விழியால் காதல் கடிதம்
வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

மெதுவாய் மேனி அணைக்க
புதிதாய் பாடம் படிக்க
இதழால் தாகம் தனிய
இருக்கும் மோகம் தனிய

முதலில் நானம் தடுக்கும்
முகத்தை மூடி மறைக்கும்
மனதில் ஆவல் பிறக்கும்
முடிவில் வாரிக் கொடுக்கும்

வெட்கம்
மறையும்

சொர்க்கம்
புரியும்

காதல்
தெரியும்

பயணம்
தொடரும்

பறந்தே
போகலாம்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக