பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே

இன்று இந்தப் பாடல் உண்மையாகவே ஒரு அரிய பாடலாகிவிட்டது. என்ன அழகான கவிதை, குரல் மற்றும் இசையமைப்பு?


 திரைப்படம்: கார்த்திகை தீபம் (1965)

 பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: ஆர். சுதர்சனம்

இயக்கம்: ஏ காசிலிங்கம்


நடிப்பு: அசோகன், பி வசந்தா







http://www.divshare.com/download/13551236-87c





இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே

இங்கு உண்ணடா செல்வமே

இங்கு உண்ணடா செல்வமே


சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

 
தங்க வீணையே தமிழின் ஓசையே

தவழும் பொதிகையின் தென்றலே

தாயின் மனநிலை தெரிந்த பின்னும்

தாமதம் செய்யாதே கண்ணே



இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே



செங்கரும்பின் வாய் திறந்து

சிதறும் மழலை தேன் சுரந்து

அங்கத் தாமரை வாடுமுன்னே

அமுதம் உண்ணடா என்தன் கண்ணே



இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே



வெண்ணிலாவை பாடச் சொல்வேன்

வீசும் தென்றலை ஆடச் செய்வேன்

கண்ணே முன்னவர் வீரம் வளர்த்த

கதைகள் யாவையும் உனக்குச் சொல்வேன்



இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

3 கருத்துகள்:

கருத்துரையிடுக