பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே

நல்ல பாடல். K J ஜேசுதாஸ், B வசந்தா இருவருக்கும் இது தமிழில் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


திரைப் படம்:   கொஞ்சும் குமரி (1963)

நடிப்பு: R S மனோகர், மனோரமா

இசை:வேதா

இயக்கம்: விஸ்வனாதன்

பாடியவர்கள்: K J ஜேசுதாஸ், B வசந்தா





http://www.divshare.com/download/11827209-36f










ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே...

பக்கம் பார்த்து வந்தேனே...பழகும் நெஞ்சை தந்தேனே...



காலை மாலை காத்திருந்தேன்.. காதலுக்கே பார்த்திருந்தேன்...

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்...குயிலை போல பாடி வந்தேன்...

ஆசை வந்த பின்னே...



பக்கத்திலே நான் வரவா...பாடம் சொல்லித் தான் தரவா...பூ போன்ற கன்னத்தையே கை விரலால் நான் தொடவா...



ஆ ஆ ஆ கள் வடியும் மேடையிலே காதல் தந்த ஜாடையிலே பழகி வந்த பழக்கத்திலே

பகலும் இல்லை இரவும் இல்லை...

ஆசை வந்த பின்னே...



அருகில் வந்த பெண்ணே...



பக்கம் பார்த்து வந்தேனே...



பழகும் நெஞ்சை தந்தேனே...



ஆசை வந்த பின்னே...



கண் பார்த்த போதிலே...கை கோர்த்த காதலே...

என்னென்று சொல்லவா என் சொந்தம் அல்லவா..



ஆ ஆ ஆ எண்ணமெனும் மாளிகைக்கு ஏற்றி வைத்த திரு விளக்கு

இதயம் கொண்ட காதலுக்கு என்னை தந்தேன் நான் உனக்கு...

ஆசை வந்த பின்னே...



அருகில் வந்த பெண்ணே...



பக்கம் பார்த்து வந்தேனே...



பழகும் நெஞ்சை தந்தேனே...



ஆசை வந்த பின்னே...



அன்பு தென்றல் வீசுதே...



மனம் பேசுதே...

இன்பம் இன்பம் என்றதே...



ஆசை வந்த பின்னே... அருகில் வந்த பெண்ணே...

பக்கம் பார்த்து வந்தேனே...பழகும் நெஞ்சை தந்தேனே...



காலை மாலை காத்திருந்தேன்.. காதலுக்கே பார்த்திருந்தேன்...

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்...குயிலை போல பாடி வந்தேன்...

ஆசை வந்த பின்னே...

4 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அந்த நாளைய ஜேசுதாஸ் பாடல்களை கேட்பதிலும் ஒரு தனி இன்பம் உள்ளது

தமிழன்பன் சொன்னது…

இன்றுதான் இந்த வலைப்பக்கத்தைப் பார்த்தேன்.
பல அரிய பாடல்களை இணைத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
நான் அறிந்தவரையில்,
பிரபல பின்னனி பாடகர் திரு.K.J.ஜேசுதாஸ் அவர்கள்
தமிழ் மொழியில்
முதன் முதலாக
பொம்மை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற
நானும் பொம்மை நீயும் பொம்மை என்று தொடங்கும் பாடலைப் பாடியதாக அறிகின்றேன்.
தகவலைச் சரிபாருங்கள்.

Unknown சொன்னது…

திரு தமிழன்பன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். KJY முதலில் பாடிய பாடல் பொம்மை பட பாடலானாலும் அவர் பாடி முதலில் தமிழில் வெளிவந்த பாடல் கொஞ்சும் குமரி படப் பாடல் என்பது இதை சுட்டினால் தெரியவரும். http://en.wikipedia.org/wiki/K._J._Yesudas
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி

தமிழன்பன் சொன்னது…

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

கருத்துரையிடுக